கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

காஞ்சிபுரம்: அரசியல் பிரமுகரை கொல்ல திட்டம் - 5 பேர் சிக்கியது எப்படி?

காஞ்சிபுரத்தில் அரசியல் பிரமுகரை கொல்ல திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் மணிமங்கலம் போலீசார் கரசங்கால் வனப்பகுதியை சுற்றிவளைத்தனர். நீண்ட நேரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு மர்ம கும்பலை தேடி வந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளே இருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதைப் பார்த்த 6 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மேலும் பிடிபட்டவர்களிடம் 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படித்தப்படும் மருந்து, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மணிமங்கலம் பகுதியில் அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, அதற்காக நாட்டு வெடி குண்டுகளை தயார் செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய புத்தேரி பகுதியைச் சேர்ந்த சூர்யா (26), திருக்காச்சூர் பகுதியைச் சேர்ந்த அழகேசன் (27), சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (29), பழைய நல்லூரை சேர்த்த நாகராஜ் (21), மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (30) ஆகிய 5 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 6 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com