ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் - அமைச்சர் ரகுபதி..!

ஆன்லைன்  சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் - அமைச்சர் ரகுபதி..!

நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.92.31 கோடி  மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதன்பின் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய அரசியலமைப்பு தினத்தில் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியை துவக்குவது சிறப்பு என்றும், மாவட்டத்திற்கு ஒரு சட்ட கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார்.

 சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்ட கல்லூரியில் பாடங்களை அமைத்து அக்குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழகத்தில் இன்று யார் வேண்டுமானலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்ட கல்லூரிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதுக்குறித்து  விரைவில் பரிசீலனை செய்வதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

 தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதுகுறித்து ஆளுநர் விளக்கத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

விரைவில் இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்