ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை:ஜெயக்குமார் ..!

ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை:ஜெயக்குமார் ..!
சென்னை பட்டினம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்திற்கு 300 ரூபாய்க்கு வைக்கவேண்டிய பேனர்களை ரூ.7,906 வைத்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று நடந்துள்ளது. தஞ்சையில் வைத்ததில் ஊழல் நடந்துள்ளது. அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் பொதுக்குழு மூலம் நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டுவிட்டது.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைய வேண்டும் என பிரதமரோ, அமித்ஷாவோ பேசியது இல்லை, இனியும் அப்படி நடக்காது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே