போக்குவரத்து விதிமீறல்:நடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு..!

போக்குவரத்து விதிமீறல்:நடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு..!

நடிகர் விஜய் 2 நாட்களுக்கு முன்பு பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். 

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை  மேற்கொண்ட விஜய்  வாரிசு திரைப்படம் வெளியாவது குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

நடிகர் விஜய் காரில் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு சென்றனர். காரில் இருந்து இறங்கிய விஜய்யுடன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

ஆலோசனைக்கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜய் வாரிசு பட பாணியில் ரசிகர்களை பார்த்து ஹார்ட்டின் கிஸ் விட்டப்படி கையை அசைத்தார்.

பின்னர் திருவான்மியூரில் தனது வீட்டிற்கு சென்றார்.  இதையடுத்து விஜய்யை பின் தொடர்ந்து சென்ற இரு ரசிகர்கள் சாலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய் போக்குவரத்து விதிகளை மீறி காரில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியதாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

முன்னதாக, பொதுமக்களுக்கு மட்டும் தான் போக்குவரத்து விதிகள் பொருந்துமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில், விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்