அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்படும்: சென்னை மாநகராட்சி..!

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்படும்: சென்னை மாநகராட்சி..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களில் 15 மண்டலங்களில்  மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 56 விளம்பரப் பலகைகள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு விளம்பரப் பலகைகளை அகற்று பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்