கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை

கோவை: உக்கடம் அருகே உள்ள கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் குண்டுவெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இதுகுறித்த விசாரணையில் ஜமேஷா முபின் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சோதனையின் போது சென்னையில் உள்ள 18 பேர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் கொடுங்கையூர் முகமது தப்ரீஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையின் போது செல்போன், லேப்டாப், மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே