அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி - லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி - லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சீர்காழி அருகே அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி செயல்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதிரி வேளூர், பாலூரன் படுகை ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி வருகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து எடுக்கப்படும் மணல் குன்னம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள யார்டில் சேமித்து வைக்கப்பட்டு ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்படுவதுடன், பர்மிட் பெறப்பட்ட லாரிகளுக்கு மட்டுமின்றி, பர்மிட் பெறாத லாரிகளுக்கும் இரு மடங்கு கூடுதல் தொகை மணல் விற்பனை செய்யப்படுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜயதசமி அரசு விடுமுறை தினமான இன்று மணல் குவாரி செயல்பட்டது. 

அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றிச் சொல்லப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 இதனை அடுத்து புத்தூர் மதுகடி என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் விஜயதசமி அரசு விடுமுறை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலை மீதி செயல்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சீர்காழி மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்