உறவினர் பெண்ணை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

உறவினர் பெண்ணை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்த வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் கிராமத்தைச் சார்ந்த தேங்காய் வியாபாரியான முருகன் வனிதா தம்பதியினரின் மகன் சதுர்வேதி 17.

இவருடைய இருசக்கர வாகனத்தில் உறவினர் பெண்ணை தர்மபுரி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் சொந்த ஊரான பண்ணந்தூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தர்மபுரி அடுத்த செங்கல் மேடு பகுதி அருகே சதுர்வேதி தனது இருசக்கர வாகனத்தில் வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்து உள்ளானது. இதில் விபத்தில் பேருந்துக்கு அடியில் சதுர்வேதி சிக்கிக்கொண்டார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வந்த அரியகுளம் காவல் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்த இளைஞரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் தர்மபுரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்