தியேட்டர்களில் ரூ.75 டிக்கெட் கட்டணம் குறைப்பு?

தியேட்டர்களில் ரூ.75 டிக்கெட் கட்டணம் குறைப்பு?

அதில் வருகிற 23ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. 

இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றனர் என்றும் அறிவித்தனர்.

நாடு முழுவதும் இன்று(23.09.2022) தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் இந்த குறைந்த கட்டண சலுகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை, டெல்லி, பெங்களூரு, சண்டிகர், புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் 75 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. 

ஆனால் தமிழ்நாட்டில் கட்டண குறைப்பு கிடையாது என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் உறுப்பினர்களாக இல்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.    

இன்று தமிழ்நாட்டில் அதர்வாவின் 'ட்ரிக்கர்', வைபவ் நடிப்பில் ‘பபூன்’ உள்ளிட்ட சில படங்கள் வெளியாகியுள்ளன. 

அதோடு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'அவதார்' படமும் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்