நரிக்குறவர்களை பழங்குடியினராக சேர்ததை கண்டித்து கலெக்டர் ஆபி்ஸ் முன்பு வனவேங்கைகள் கட்சி சாலை மறியல்

நரிக்குறவர்களை பழங்குடியினராக சேர்ததை கண்டித்து கலெக்டர் ஆபி்ஸ் முன்பு வனவேங்கைகள் கட்சி சாலை மறியல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மதுரை சாலையில் வனவேங்கை கட்சி சாரபாக  நரிக்குறவர் என்னும் ஜாதிப் பெயரில் குறவர் சொல்லை நீக்கிடக்கோரியும் ,வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வக்ரா போக்லி குருவிக்காரர் என உண்மையான ஜாதிப் பெயரைக் கொண்ட மக்களை குறவர் ஜாதி பெயரை இணைத்து பழங்குடியின  பட்டியலில் நரிக்குறவர் என்று சேர்க்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை திரும்ப பெற கோரியும், நரிக்குறவர் நலவாரியம் என்னும் வாரிய பெயரில் குறவர் சொல்லை நீக்கிடக்கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட 100 - க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனி மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் முற்றியதால் ஏடிஎஸ்பி விவேகானந்தர் தலைமையில் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்