தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா ? அரசு வெளியிட்டுள்ள ஹேப்பி நியூஸ்

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா ? அரசு வெளியிட்டுள்ள ஹேப்பி நியூஸ்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம். பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் கூறியதாவது:

"விரைவு பேருந்துகளை பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்.20-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று (செப்.20)தொடங்கியது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பு, அதாவது அக்.21-ம்தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று (செப்.21) முதல் முன்பதிவு செய்யலாம். 

தசரா பண்டிகையையொட்டி திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்துக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். 

வரும் அக்.1 முதல் 4 வரை சென்னை, கோவையிலிருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்துக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை முடிந்து திரும்ப ஏதுவாக அக்.6 முதல் 10-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்