தமிழ்நாடு
திருச்செந்தூர் திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளர்
திருச்செந்தூர் திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளர்
திருச்செந்தூர் திமுக கவுன்சிலரை கண்டித்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற லாட்ஜ் உரிமையாளர்
திருச்செந்தூர் நகர திமுக செயலாளராக இருப்பவர் வால் சுடலை. அவரது சகோதரர் ராமகிருஷ்ணன், ஸ்ரீ வேல் என்கிற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
விடுதி நடத்துவதற்கான உரிமம் மற்றும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி அனைத்தும் முறையாக செலுத்தியிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
அவரிடம் திருச்செந்தூர் 5 - வது வார்டு திமுக கவுன்சிலர் மா.சுதாகர் பாதாள சாக்கடை தொடர்பாக லஞ்சம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்வதாக புகார் கூறி வந்தார்.
இந்த நிலையில் குடிநீர், பாதாள சாக்கடை, மின் இணைப்பு ஆகியவற்றை அடிக்கடி நிறுத்தி இடையூறு செய்வதாக கூறி நகராட்சி அலுவலகம் முன்பு மனைவியுடன் தீக்குளிக்க முயன்றார்.