அரசுப் பள்ளிக்கு உதவி உண்டு - அரசு உதவி பெறும் பள்ளிக்கு கிடையாது!

அரசுப் பள்ளிக்கு உதவி உண்டு - அரசு உதவி பெறும் பள்ளிக்கு கிடையாது!
அரசுப் பள்ளிக்கு உதவி உண்டு - அரசு உதவி பெறும் பள்ளிக்கு கிடையாது!

அரசுப் பள்ளிக்கு உதவி உண்டு - அரசு உதவி பெறும் பள்ளிக்கு கிடையாது!

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த திட்டத்தின் பயனை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற முடியாது. ஏற்கனவே ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அந்த திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கிடையாது. அரசுப் பள்ளிகளைப்போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் அதிக அளவில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகள் இல்லாத பல பகுதிகளில் அரசின் உதவி பெறும் பள்ளிகளே இருக்கிறது. அப்படியானால் அந்த பள்ளியில் படிப்பது அந்த மாணவர்கள் செய்த குற்றமா? 

எனவே, இதுபோன்ற நல்ல திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com