போதையில் கார் ஒட்டி சென்று 2 பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்

போதையில் கார் ஒட்டி சென்று 2 பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்
போதையில் கார் ஒட்டி சென்று 2 பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்

போதையில் கார் ஒட்டி சென்று 2 பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர்

போதையில் கார் ஒட்டி சென்று இரண்டு பெண்களை கொன்ற ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பழைய மாமல்லபுர சாலை, நாவலூர் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற பெண்கள் இருவர் மீது ஐ.டி. ஊழியர் ஒருவர் அதிவேகமாக குடிபோதையில் காரை ஒட்டி வந்து மோதியதில் அந்த இரு பெண்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த பெண்கள் பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர், விபத்தில் சிக்கிய ஒருவரான ஸ்ரீலட்சுமி என்பவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மற்றொருவரான லாவண்யா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய மோதிஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com