தமிழ்நாடு
சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் டிராக்டர் ஏறி உயிரிழப்பு
சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் டிராக்டர் ஏறி உயிரிழப்பு
சைக்கிளில் சென்ற 10 வயது சிறுவன் டிராக்டர் ஏறி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பள்ளி சிறுவன் மீது கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
வெங்கமேட்டை சேர்ந்த 10 வயதான பொன்வெற்றிதமிழ் பள்ளியிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர், அதிவேகமாக வந்து சிறுவனின் மீது மோதியது.
சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிரெக்டர் சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.