அடிக்கடி பணியிட மாற்றம் - செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற டாஸ்மாக் ஊழியர்
அடிக்கடி பணியிட மாற்றம் - செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற டாஸ்மாக் ஊழியர்
அடிக்கடி பணியிட மாற்றம் செய்து அலைக்கழித்ததால் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே விநாயக குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் புத்தூர் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். அதிகாரிகள் இவரை அடிக்கடி திருநின்றியூர், காத்திருப்பு, புதுப்பட்டினம் என பல்வேறு கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
இதனால் சுரேஷ் குடும்பத்துடன் இருக்க முடியாமலும் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் இன்று மதியம் 12 மணி அளவில் சேந்தங்குடி ரயில்வே கேட் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினர்.