தரையெங்கும் மனித ரத்தம் கொட்டியுள்ளது அதன் அருகிலே சிறுநீர் பைகள் நோயாளிகள் பயன்படுத்தியது ஆங்காங்கே உள்ளது
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிக மோசமான சுகாதாரமற்ற சூழ்நிலையில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தரையெங்கும் மனித ரத்தம் கொட்டியுள்ளது அதன் அருகிலே சிறுநீர் பைகள் நோயாளிகள் பயன்படுத்தியது ஆங்காங்கே உள்ளது நோயாளிகளுக்கு பன்படுத்தப்பட்ட பஞ்சி மற்றும் துணிகள் ஊசி ரத்தக்கரையுடன் சிதறிக் கிடக்கின்றது.
இந்த அரசு மருத்துவமனையில் அமைச்சர் பெருமக்கள் அல்லது அரசு அதிகாரிகள் சிகிச்சை பெறுவார்களா?சேலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் எதிரில் உள்ள இந்த மருத்துவமனையின் அவலநிலையை மாற்றி மக்களுக்கு சுகாதாரமான சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் கிடைத்திட போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரின் முகநூல் கொந்தளிப்பு பதிவுதான் அது.மாவட்ட செயலாளர் பெரியசாமியிடம் பேசினோம். ' சேலம் ஜி.ஹெச் யில் லஞ்சம்தான் பிரதானமாக உள்ளது.
ஆண்குழைந்தைகள் பிறந்தால் 1000, பெண் குழந்தைகள் பிறந்தால் 500 என்று லஞ்சம் வாங்குறாங்க . அதிலும் வண்டி தள்ளற பணியாளர்கள் 100 கொடுத்ததான் வண்டியை தள்ளுறாங்க. வண்டிகாரங்க ஒரு நாளைக்கு ரூ 1500 வருமானம் இல்லமா வீட்டுக்கு போக மாட்டேங்களாம்.
நான் எங்க அம்மாவ ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டு அல்லல் பட்டேன். விபத்து சிக்கிச்சைக்கு, அவசர சிகிச்சை பிரிவில அட்மிட் ஆனவருக்கு 2 நாள் கழிச்சி வந்து பார்க்கிறாங்க டாக்டருங்க. அதுவும் எங்க அமைப்பு தலையிட்டதால் தான் .
எல்லா பணியாளர்களும் போனைத்தான் நோண்டிகிட்டு இருக்காங்களே தவிர மருத்துவமனையில் சுத்தம் சுகாதாரம் என்ற எதுவும் இல்லை . நாம போயி கேள்வி கேட்ட அப்போதைக்கு பிரச்சினை யை சரி செய்யற மாதிரி நடிக்கிறாங்க.அதன் பிறகு சுகாதாரமற்ற நிலைதான் தொடருது.
பல நண்பர்களின் பார்வைக்கு பட்டதை முதல்வர் கவனத்துக்கு போகனுமுன்னுதான் முகநூலில் பதிவு போட்டேன். அரசாங்கம் கொஞ்சம் சேலம் ஜி.ஹெச்யை திரும்பி பார்க்கனும்.' என்று வேதைனையோடு பகிர்ந்தார்.நடவடிக்கையை அரசாங்கந்தான் எடுக்க வேண்டும்..!