தர்மபுரி நகரப் பகுதிகளில் கடந்த 4 மாதமாக திருட்டு சம்பவங்களில் 3 பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தர்மபுரி நகரப் பகுதிகளில் கடந்த 4 மாதமாக திருட்டு சம்பவங்களில் 3 பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களை சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டு அவர்களை தேடி வந்தனர்.
ஆனால் அவர்கள் போலீஸ் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தர்மபுரி சப் டிவிசன் மகளீர் குற்றப்பிரிவு போலீசார் ராமா தங்கும் விடுதி அருகே அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த எசக்கியம்மாள், ராணி, திலகா என தெரியவந்தது.
இவர்களுக்கு 8-க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், மூன்று குற்றச் சம்பவங்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து 22 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன அதன் மதிப்பு 8 லட்சம். இந்த நகைகள் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.