தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
மேலும் அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது .
மேலும் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.