பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம்

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம்

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின் போது சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை  நோக்கி பயணிக்கும் போது ஆண் பயணி, முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல் புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்தால் நடத்துநர்கள் எச்சரிக்கை விடுத்து இறக்கிவிடலாம்

நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்