நாகை: பைனான்சியர் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

நாகை: பைனான்சியர் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

நாகப்பட்டிணம் அருகே பைனான்சியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 40) என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பருடன் அலுவலகத்தில் பேசிகொண்டிருந்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட மனோகரன் நண்பர் மணிவேலையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய நண்பர் மணிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்து வருகிறார். 

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை  நிலவி வருகிறது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்