சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் 

உச்ச நீதிமன்ற கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ,சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் .

சென்னையில் நடந்த தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ,தேசிய மனித உரிமை ஆணைத் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி ஆகியோர் சிறப்பு உரையாற்றியுள்ளனர் .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் மனித உரிமைகளுக்காகச் சிறப்பாக பணியாற்றிய திருவாரூர்,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளையும்,போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளார் 

மேலும் இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் ,நீதித் துறைகளின்  கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்