தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

வளிமண்டல மேல் அடுக்கின் நிலவும் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோடு  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Find Us Hereஇங்கே தேடவும்