சட்டவிரோத பணப்பரிமாற்றம்... சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை...!

சட்டவிரோத பணப்பரிமாற்றம்... சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை...!

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட புகாரில் சென்னையில் 47 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் முறைகேடான பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரினை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 47 இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் யார் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெளியேயும், கிரீம்ஸ் சாலையில் உள்ள மற்றொரு நிறுவனத்திலும், நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள பைனான்சியர் வீடு மற்றும் எழும்பூரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Find Us Hereஇங்கே தேடவும்