தங்கத்தில் தேசிய கொடியை செய்த கோவை நபர்

தங்கத்தில் தேசிய கொடியை செய்த கோவை நபர்

நாட்டின் 75 - வது சுதந்திர தினத்தையொட்டி தங்கத்தில் தேசிய கொடியை செய்து கோவையை சேர்ந்த நகை தொழிலாளி வி.எம்.டி. ராஜா அசத்தியுள்ளார்.

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற 15 - ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப்பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. 

அந்த வகையில், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறித்தியிருந்தார். 

இது தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி வி.எம்.டி. ராஜா என்பவர் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது போன்று 300 மில்லி கிராம் தங்கத்தில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்