தபால் நிலையங்களில் விற்பனையாகும் தேசிய கொடி

தபால் நிலையங்களில் விற்பனையாகும் தேசிய கொடி

நாட்டின் 75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய நாட்டின் 75 - வது சுதந்திர தினம் வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களை அறிவுறித்தியிருந்தார்.

இதற்காக, “இல்லந்தோறும் தேசியகொடி” என்ற இயக்கமும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டது. அதேபோல், தமிழகத்தில் உள்ள இந்திய தபால் நிலையங்களில் கடந்த 1 ஆம் தேதி முதல் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டது.

தாபல் நிலையங்கள் மூலம் விற்கப்படும் ஒரு கொடியின் விலை ரூ.25 ஆகும். மேலும், தபால் நிலையங்களில் விற்கப்படும் தேசிய கொடியின் அளவு 30*20 ஆகும். அதேபோல் சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனைக்கு உள்ளது. 

கொடிகளை வாங்க விரும்பும் பொதுமக்கள் அருகே உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, www.epostoffice.gov.in என்ற முகவரியில் ஆன்லைனிலும் வாங்கலாம்.

Find Us Hereஇங்கே தேடவும்