75 - வது சுதந்திர தின விழா ஒத்திகையில் ஈடுபட்ட காவல்துறையினர்

75 - வது சுதந்திர தின விழா ஒத்திகையில் ஈடுபட்ட காவல்துறையினர்

75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்கின்றனர். 

75-வது சுதந்திர தின விழா வருகிற 15 - ஆம் தேதி, சென்னை கோட்டையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வருகிற 6, 11, 13 - ஆம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதை தொடர்ந்து, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. காலை தொடங்கிய காவல் துறையினரின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது ராஜாஜி சாலையில் நடைபெற்று வருகிறது. 

Find Us Hereஇங்கே தேடவும்