அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர்

அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்ட முதல்வர்

காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் அதிகளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக காணொலி மூலம் ஆய்வினை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு மாநில அவசரக் கட்டுபாட்டு மையத்திற்கு நேரில் சென்று வெள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மழை விவரம், காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் பாவனி - கந்தன்பட்டறை, நாமக்கல் மாவட்ட பள்ளிப்பாளையம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், பிச்சாண்டார் கோவில் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசியில் பேசி, விவரங்களை கேட்டறிந்தார். 

Find Us Hereஇங்கே தேடவும்