நீலகிரி, கோவையில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு....!

நீலகிரி, கோவையில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு....!

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5 முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 6, 7ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் 6ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Find Us Hereஇங்கே தேடவும்