அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியா்களுக்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு...!

அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியா்களுக்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பு...!

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியா் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான கணினி வழித்தோ்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடா்ந்து தோ்வு முடிவை ஜூலை 4-ஆம் தேதி டிஆா்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். 

இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முதுநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அத்துடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆா்பி அறிவித்துள்ளது. இது தோ்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்