குற்றாலம்- ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க நீடிக்கும் தடை...!

குற்றாலம்- ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க நீடிக்கும் தடை...!

தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் 5ஆவது நாளாக அருவிகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடித்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் இன்றுடன் 5ஆவது நாளாக ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி அருவிகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் நீரின் அளவு 6 மணி நேரப்படி 2 லட்சத்து 14 ஆயிரத்து 252 கன அடியாக அதிகரித்துள்ளது.

மாயனூர் கதவணையை கடந்து டெல்டா மாவட்டங்களுக்கு 2,13,132 கன அடி நீர் சென்று கொண்டுள்ளது. மூன்றாவது நாளாக ராமநதி 300 கன அடி உபரி நீர் 

வெளியேற்றப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக 84 அடி கன அளவு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மூன்றாவது நாளாக இன்று 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாதுகாப்பு பணிகளுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து 24 பேர் கொண்ட 4ஆவது தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் குமாரபாளையம் வந்தடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தொடர் மழைப்பொழிவின் காரணமாக அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி பொது பணி துறை அதிகாரிகள் 250 கன அடி வீதம் அணையிலிருந்து நீரை திறந்துள்ளனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சமாக குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் நேற்று மாலை நிலவரப்படி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அடியில் இருந்து நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 2 லட்சம் கன அடியாக உள்ளது. மேலும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் பரிசல் இயக்கவும் குளிக்கவும் 28ஆவது நாளாக தடை விதித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்