10ம் வகுப்பு தேர்வில் தோல்வி... விரக்தியில் மாணவர் தற்கொலை...!

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி... விரக்தியில் மாணவர் தற்கொலை...!

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த மாணவன் சுரேந்தர். இவரது தந்தை இறந்துவிட்டார். தனது தாயார் மற்றும் சகோதரிகள் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். 

சுரேந்தர டுடோரியல் காலேஜ் மூலமாக 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இந்தநிலையில் நேற்று இதன் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவர் தோல்வி அடைந்தது தெரியவந்தது.

அவர் நேற்று இரவு முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். திடீரென இன்று அவர் சேந்திமங்கலம் ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாட்டில்  உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com