முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக 3 பேர் குழு ஆய்வுக்கு பிறகு உறுதி அளித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக 3 பேர் குழு ஆய்வுக்கு பிறகு உறுதி அளித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தவும், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர் வள ஆணையர் தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த குழுவின் தமிழகம், கேரளா சார்பில் தலா ஒரு பிரதிநிதியும் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் அடிக்கடி அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் அறிக்கையும் 3 பேர் குழுவிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
அதன்படி அணையின் தற்போதைய நீர்மட்டமான 112.80 அடிக்கு ஏற்ப அணை பலமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அணைக்கு செல்லும் வல்லக்கடவு சப்பாத்து பாலத்தை நிரந்தரமாக சீரமைக்கும்படி தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக அடுத்த மாதம் 2வது வாரத்தில் மீண்டும் அணையில் மூவர் குழு ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது.