பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரை பணியில் சேர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை பின்னடைவை சந்தித்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரை பணியில் சேர்க்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை பின்னடைவை சந்தித்துள்ளது.
மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சட்ட விதிகளை மீறியதாக 8 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நூற்றுக்கணக்கான மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெட்ரோ ரயிலை இயக்குபவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மெட்ரோ ரயில் இயக்கம் தடைபட்டது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ரயில் பணியாளர்கள், தொழிலாளர்கள் நல வாரியம் என்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இந்த கூட்டம் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்னெழுந்தது. ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதனை மறுத்துவிட்டது. எனவே பேச்சுவார்த்தை பின்னடைவை சந்தித்தது. எனவே இன்றும் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.