ஆதம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தி பலாத்காரம்! அதிர்ச்சியுற்ற உறவினர்கள் புகார்!!

ஆதம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தி பலாத்காரம்! அதிர்ச்சியுற்ற உறவினர்கள் புகார்!!
ஆதம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தி பலாத்காரம்! அதிர்ச்சியுற்ற உறவினர்கள் புகார்!!

சென்னை ஆதம்பாக்கத்தில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த ரௌடியை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த ரௌடியை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ராபின். இவர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 6 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ராபின் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை தொல்லை கொடுத்த வந்த நிலையில், அவரை மிரட்டி கடத்திச் சென்றுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு மாந்தோப்பில் அப்பெண்ணை பலாத்காரம் செய்து பிறகு, துரைப்பாக்கத்தில் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் மடிப்பாக்கத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com