தண்ணீர் பஞ்சத்தைப்போல், தமிழகத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பஞ்சத்தைப்போல், தமிழகத்தில் அரிசிப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக அரசு மேலும் 3 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவுக்கு திறக்கவில்லை என்றும், 25 டன் கொள்முதல் செய்வது வழக்கம் என்றும், ஆனால் 15 லட்சம் டன் நெல் கொள்முதல் மட்டுமே செய்திருக்கிறது என்றும் அழகிரி தெரிவித்தார்.
கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சம் எப்படி வருமோ, அதேபோல அரிசி பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம் என்றும் அவர் கூறினார்