தமிழ்நாடு
முத்தூட் நிறுவனத்தில் 814 பவுன் நகை கொள்ளை! பெண் ஊழியரின் காதலன் கைது!
முத்தூட் நிறுவனத்தில் 814 பவுன் நகை கொள்ளை! பெண் ஊழியரின் காதலன் கைது!
அங்கு வேலை பார்க்கும் பெண்கள் மூலம் இந்த கொள்ளையை நடத்தியதாகவும் தெரிவித்தான்.
கோவை, ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நகை அடகுக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சனிக்கிழமை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களை மிரட்டி 814 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றான்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடினர்.
இந் நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கியிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவன் தான் கொள்ளை அடித்தான் என்பதும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரேணுகாதேவியின் காதலன் அவன் என்பதும், அங்கு வேலை பார்க்கும் பெண்கள் மூலம் இந்த கொள்ளையை நடத்தியதாகவும் தெரிவித்தான்.
இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.