இலங்கையில் தொடர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நெருக்கமான கூட்டாளி ஒருவர், சென்னையில் தங்கி நோட்டமிட்ட தகவல் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் தொடர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நெருக்கமான கூட்டாளி ஒருவர், சென்னையில் தங்கி நோட்டமிட்ட தகவல் உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் சர்ச்சுகள் மற்றும் தனியார் விடுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 350க்கும் மேற்பட்ட நபர்கள் பலியானார்கள். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன், அங்கு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நெருக்கமான கூட்டணி ஹசன் என்பவன், அங்கிருந்து தமிழகம் வந்து தங்கியிருந்து சில பகுதிகளை நோட்டமிட்டுள்ளான் என்று உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ஹசன், தமிழகம் ஏன் வந்தான், இங்கு யாரையெல்லாம் சந்தித்தான் என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.