ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாற உள்ள நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் முழு உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாற உள்ள நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் முழு உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, வங்கக் கடலில், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவில், ஃபனி புயல் மையம் கொண்டுள்ளது. இது சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை வந்து, திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4 ஆம் தேதி கரையைக் கடக்கிறது.
இதனால், இன்று முதல் சென்னை உட்பட வட தமிழகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மெரீனா கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் மெரீனா பீச் செல்வதை தவிர்க்குமாறும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.