மெட்ரோ ஊழியர்களின் போராட்டத்தால் சேவை பாதிப்பு!

மெட்ரோ ஊழியர்களின் போராட்டத்தால் சேவை பாதிப்பு!
மெட்ரோ ஊழியர்களின் போராட்டத்தால் சேவை பாதிப்பு!

மெட்ரோ அலுவலக ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெட்ரோ அலுவலக ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மெட்ரோ அலுவலகத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கி மெட்ரோ அதிகாரிகள் பணி அமர்த்துவதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் பணி வழங்கக் கோரி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மெட்ரோ நிறுவனம் ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும், மெட்ரோ சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், சில இடங்களில் சிக்னல் கோளாறு காரணமாக, சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும், வண்ணாரப்பேட்டை- ஏர்போர்ட் வழிதடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஊழியர்கள் சங்கம் அமைத்ததன் காரணமாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com