கலைஞர் நினைவு நூலகம் பணிகள் டிசம்பரில் முடியும்!

கலைஞர் நினைவு நூலகம் பணிகள் டிசம்பரில் முடியும்!

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பு சுமார் 114கோடியாகும். மதுரை புது நத்தம் சாலையில் 6 அடுக்குகளைக் கொண்ட நூலக கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், கட்டிடத்திற்கு ரூ.99 கோடியும், புத்தகம் வாங்குவதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கபட்டுள்ளது.

கலைஞர் நினைவை போற்றும் வகையில் 4000 ஆய்வு அறிக்கைகள், புத்தகங்கள் அடங்கிய கலைஞரின் ஆய்வகம் என்ற தனிப்பிரிவு அமைக்க திட்டமிடபட்டுள்ளது. மேலும் போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் 3000 புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவு, இது தவிர அரசியல், சுற்றுலா, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட 36 வகையான நூலக பிரிவுகள் செயல்படும்.

இந்தக் கலைஞர் நினைவு நூலகத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வங்க முடிவு செய்யபட்டுள்ளது. கலைஞர் நினைவு நூலகத்தில் வைக்க உள்ள புத்தகங்களை தேர்வு செய்வதற்கு மூத்த கல்வியாளர்கள் மற்றும் பொது நூலக அதிகாரிகள் தலைமையில் நிபுணர் குழு அமைக்கபட்டுள்ளது.

மேலும் நிபுணர் குழு தேர்வு செய்து வழங்கும் பட்டியலின் அடிப்படையில் புத்தகங்களை வாங்க ஒப்பந்த பள்ளி வெளியிடபடும். இதுமட்டும் இல்லாமல் டிசம்பர் மாத இறுதிக்குள் கலைஞர் நினைவு நூலக பணிகள் 100 சதவீதம் நிறைவடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்