இறுதி சடங்கில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண் கைது...!

இறுதி சடங்கில் சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண் கைது...!

இறுதி சடங்கின்போது சொந்த பெரியப்பா வீட்டில் 48 சவரன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கருப்பையா என்பவரின் மனைவி கடந்த 2மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதி சடங்குகளுக்கு பின் வீட்டிலிருந்த 48 சவரன் நகைகள் காணாமல் போனது. 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இறுதி சடங்குகளுக்கு வந்த குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதையடுத்து கருப்பையாவின் தம்பி மகள் கௌசல்யா, பீரோவிலிருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் 48 சவரன் நகைகளை மீட்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்