திருப்பத்தூரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

திருப்பத்தூரில் புதிதாக ரூ.110 கோடி மதிப்பில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவரை கலெக்டர் அமர் குஷ்வாஹா மற்றும் திமுக நிர்வாகிகள் புத்தகங்கள்மற்றும் சால்வை போன்றவைகள் வழங்கி வரவேற்றனர். 

அதன் பின்னர் புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரூ.110 கோடியில் கட்டப்பட்ட இந்த புதிய கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 200 பேர் அமரும் வகையில் பெரியளவில் கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 300 இருக்கைகளை கொண்ட குறை தீர்வுக் கூட்ட அரங்கம், நீரூற்றுடன் கூடிய பூங்கா, மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் மூன்று சிறிய கூட்டரங்கங்களையும் உள்ளடக்கி உள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் துரைமுருகன், ஏ.வி.வேலு போன்ற அமைச்சர்களும், கலெக்டர் அமர்குஷ்வாஹாவும், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி மற்றும் தேவராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Find Us Hereஇங்கே தேடவும்