சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு...!

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு...!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் 4 மற்றும் 10ம் தேதிகளில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. 

பெரும்பாலான மாநிலங்களில் 12ம் வகுப்பு வாரிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நிலவி வந்தது. 

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 10ம் தேதி வெளியாகும் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்