செங்கல்பட்டு: செவிலியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் 3 பேர் கைது...!

செங்கல்பட்டு: செவிலியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள் 3 பேர் கைது...!

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 20 வயதான செவிலியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை செங்கல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் நர்சிங் டிப்ளமோ முடித்துள்ள இளம்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலி பணியிடம் இருப்பதை அறிந்த அந்த பெண்ணும்,  அவருடைய தோழிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேர்காணலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் சரவணன் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து வேலைக்கான நேர்காணலில் கலந்துகொள்ளும் திட்டத்தைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண் சரவணனிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் தோழிகளுடன் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வேலூர் செல்லும் பேருந்துக்காக தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை இரவு உணவிற்கு அழைத்துள்ளார். 

இதனைதொடர்ந்து காரில் சென்ற அந்த இளம்பெண் வேலூருக்கு செல்வதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு பின்னர் அவர்களை முன் செல்லுமாறு கூறியுள்ளார். இதற்கிடையில், சரவணன் தனது நண்பர்களான டி சாரதி (21), செங்கல்பட்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் எஸ் சூர்ய பிரகாஷ் (22) ஆகியோரை அழைத்துள்ளார். பின்னர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்புதர்கள் நிறைந்த பகுதியில் வலுக்கட்டாயமாக பாதிக்கப்பட்ட பெண்ணை மதுபானம் குடிக்க வைத்து மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை புதருக்குள் விட்டுவிட்டு, குற்றவாளி காரில் வேகமாகச் சென்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் கிடந்த பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு வந்து தனது உயிரைப் பறிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து சரவணன், சாரதி, சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Find Us Hereஇங்கே தேடவும்