சென்னையில் 11 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் 11 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை மருத்தவ கல்லூரி மாணவர்கள் 277 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, தற்போது முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது. மேலும் பல கட்டுப்பாடுகளும் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தின் படி, சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் மொத்தம் 277 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 11 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த 11 மாணவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்