பாதுகாப்பு வசதி இல்லாத 9 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போக்குவரத்து அலுவலர் அதிரடி உத்தரவு

பாதுகாப்பு வசதி இல்லாத 9 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போக்குவரத்து அலுவலர் அதிரடி உத்தரவு

 ஆலந்தூர் பகுதியில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாத ஒன்பது பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி மறுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் பாதுகாப்பு வசதி உள்ளதா என்று சோதனை செய்வதற்காக ஆலந்தூர் பகுதியில் உள்ள 131 தனியார் பள்ளி வாகனங்கள் ஆலந்தூரில் உள்ள ஆர்டிஓ மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது, வாகனங்களின் உரிமம், படிக்கட்டுகள், ஆபத்து காலத்தில் வெளியேறும் வசதிகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் வாகனம் ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமம் போன்றவை குறித்து ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. 

ஆய்வின் முடிவில், உரிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இயங்கும் ஒன்பது வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்த பின்னர் சம்மந்தப்பட்ட  பள்ளி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்து வட்டார அலுவலர் தெரிவித்துள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்