தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...!

தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 ஜூன் 29ஆம் தேதி அன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

ஜூன் 30ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குமரிக்கடல், கர்நாடக, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்