11 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 42 வயதில் 93% தேர்ச்சி - மதுரை பெண் சிறைக்கைதி அசத்தல்

11 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 42 வயதில் 93% தேர்ச்சி - மதுரை பெண் சிறைக்கைதி அசத்தல்

மதுரை சிறையில் உள்ள 42 வயதான பெண் சிறைக்கைதி ஒருவர் 11 ஆம் வகுப்பு பொது தேர்வில் 93 சதவீத விழுக்காடு எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நேற்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களோடு மட்டுமின்றி மதுரை மத்திய சிறையின் சிறைக்கைதிகளும் தேர்வு எழுதினர்.

அதாவது, மதுரை மத்திய சிறையில் உள்ள 16 ஆண் சிறைக்கைதிகளும், ஒரேயொரு பெண் கைதியும் நடந்து முடிந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இதில் 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதிலும், குறிப்பாக பொதுத்தேர்வு எழுதிய 42 வயதான ஒரேயொரு பெண் கைதி 600க்கு 557 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளார். மேலும், இவர் ஐந்து பாடங்களில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதேவேளையில், அருண் என்ற 27 வயதான ஆண் கைதி 600க்கு 538 மதிப்பெண் பெற்று தேர்ச்சியாகியுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்