காட்டுப் பகுதியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு...!

காட்டுப் பகுதியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு...!

காட்டுப் பகுதியில் தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்களால் மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

புதுப்பட்டி காட்டுப் பகுதியில் தொல்லியல் பட்டப்படிப்பு மாணவர்கள் நேற்று (ஜூன். 27) மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 அடி உயரம் இரண்டே கால் அடி அகலம் கொண்ட சிலை கிடைத்துள்ளது. 

இந்த சிலை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் சமணர் சமயத்தின் 24 ஆவது தீர்த்தங்கரான மகாவீரர் சிலை என்பதும் தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிலை பத்திரமாக மீட்கப்பட்டு விருதுநகர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Find Us Hereஇங்கே தேடவும்